புதுடெல்லி,
இந்திய விமானப்படையின் தற்போதைய தளபதியாக இருக் கும் தலைமை ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் வருகிற 31-ந் தேதியுடன் பணிநிறைவு பெறுகிறார். இதையடுத்து விமானப்ப டையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தற்போது துணைத் தளபதியாகப் பணியாற்றி வரும் அசுதோஷ் தீட்சித், விமானப்படையில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். இவர், தலைமை ஏர் மார்ஷல் அந்தஸ்துடன் வருகிற 31-ந் தேதி மதியம் நாட்டின் 29-வது விமானப்படைத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.