அசுதோஷ் தீட்சித் 
தேசிய செய்திகள்

இந்திய விமானப்படையின் தளபதியாக அசுதோஷ் தீட்சித் பதவியேற்பு

அசுதோஷ் தீட்சித், கடந்த 1986-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக தனது சேவையை தொடங்கினார்.

புதுடெல்லி,

இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் இன்று முறைப்படி பொறுப்பேற்று கொண்டார்.

அமர் பிரீத் சிங் ஓய்வு

இதுவரை விமானப்படை தளபதியாக பதவி வகித்து வந்த ஏர் சீப் மார்ஷல் அமர் பிரீத் சிங் இன்றுடன் ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து, நாட்டின் வான் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த பொறுப்பை அசுதோஷ் தீட்சித் ஏற்றுக்கொண்டார்.

3,500 மணி நேரம்

அசுதோஷ் தீட்சித், கடந்த 1986-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக தனது சேவையை தொடங்கினார். மிராஜ்-2000, மிக் ரக விமானங்கள், ஜாகுவார் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை 3,500 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கிய அனுபவம் கொண்டவர்.

கார்கில் போரில் வீர தீரம்

கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க கார்கில் போரின் போது, எதிரிகளை திணறடித்த 'ஆபரேஷன் சபேத் சாகர்' மற்றும் 'ஆபரேஷன் ரக்ஷக்' ஆகியவற்றில் பங்கேற்று முக்கிய பங்காற்றினார். இவரது 40 ஆண்டுகால சேவையை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு 'பரம் விசிஷ்ட் சேவா' பதக்கம் உட்பட பல உயரிய ராணுவ விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

தற்போது விமானப்படையின் உச்சபட்ச பதவியை அசுதோஷ் தீட்சித் ஏற்றுள்ளதை அடுத்து, அவருக்கு பல்வேறு ராணுவ உயர் அதிகாரிகளும், தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT