புதுடெல்லி,
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 53 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அந்திம் பங்கலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது செயல்பாடு முன்மாதிரியானது என்றும், அவர் ஒரு அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்திம் பங்கல் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவர் நாட்டிற்கு மேலும் பல பெருமைகளைச் சேர்த்து, மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பார் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த வீராங்கனை அந்திம் பங்கல் வென்ற வெள்ளிப் பதக்கமானது உண்மையிலேயே ஒரு முன்மாதிரியானது! மகளிர் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் அவரது இந்த அற்புதமான செயல்பாட்டிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அந்திம் பங்கலின் இந்த அசாத்திய திறமை வரும் காலங்களிலும் நாட்டுக்கு மேலும் பல பெருமைகளை தேடித்தர வேண்டும். அத்தோடு, நமது நாட்டின் பிற இளம் விளையாட்டு வீரர்களுக்கும் இது ஒரு பெரும் ஊக்கமளிப்பதாக அமையட்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.