கவுகாத்தி
அசாமில் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மே 20-ந்தேதியுடன் அசாம் மாநில பதவி காலம் முடிவடையும். இந்நிலையில், 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்திற்கு, ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு 22 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டு உள்ளது. கடந்த 3-ந்தேதி 42 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலையும், கடந்த சனிக்கிழமை 23 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. இதனால், மொத்தம் 87 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.
அசாமில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.க. தேர்தல் பணியாற்றி வருகிறது. எனினும், பா.ஜ.க.வை வீழ்த்தி இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியும் திட்டம் தீட்டி வருகிறது.