தேசிய செய்திகள்

அசாம்: எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு - பலர் காயம்

விபத்து நடந்த பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயில்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சித்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மிசோரம் மாநிலம் சைராங் நோக்கி கொல்கத்தா - சைராங் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள டிகாரு ரெயில் நிலையம் வந்தது.

தடம்புரண்டு விபத்து

அப்போது ரெயிலை நிறுத்த முயன்றபோது, ரெயில் லோகோ பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து என்ஜின் உட்பட 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் பலர் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

மீட்பு பணிகள்

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பயணிகளுக்கு மாற்று ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT