தேசிய செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெற்றது. பின்னர் மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வருகின்ற 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.