கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

ரூ.6 கோடி சொத்து; போலீஸ் ஏட்டு வீட்டில் லோக் அயுக்தா சோதனை

இந்தூர் மற்றும் தேவாஸ் மாவட்டங்களில் 15 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இந்தூர்

மத்திய பிரதேசத்தில் ரூ.6 கோடி சொத்து சேர்த்த வழக்கில் போலீஸ் ஏட்டு வீட்டில் லோக் அயுக்தா சோதனை நடத்தியது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வரும் ஏட்டு பிரோஸ் கான் (வயது 48). வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக புகார் எழுந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தியபோது. அவர் ரூ.6.27 கோடிக்கு சொத்து சேர்த்திருந்தது தெரியவந்தது.

இது அவரது அறியப்படும் வருவாயை விட 3 மடங்கு அதிகம் ஆகும். எனவே அவரது வீடு மற்றும் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் நேற்று லோக் அயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தூர் மற்றும் தேவாஸ் மாவட்டங்களில் 15 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அவர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT