தேசிய செய்திகள்

எதிர்காலங்களில் பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிருங்கள் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை

எதிர்காலங்களில் பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையால் நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். பணமிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கியூயில் நின்று 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனவே இனி வரும் காலங்களில் பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை தவிருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT