புதுடெல்லி,
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்புக்கு மத்திய அரசு விதித்த தடை இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில், அந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன், அதன் உறுப்பினர்கள், குறிப்பாக நிறுவனர் ஜாகீர் நாயக், மதங்களுக்கிடையே வெறுப்பையும், பகைமையையும் விதைக்கும்வகையில் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வருகிறார்.
இது, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் ஒரு மதத்தை சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட தூண்டி விடுகிறார். இதை தடுக்காவிட்டால், அந்த அமைப்பு நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபடும். எனவே, இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேசன், சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.