தேசிய செய்திகள்

விஜயா, தேனா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு

விஜயா, தேனா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் போது இது நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாற உள்ளது.

நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் பேசுகையில், பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் முடிந்ததும், மூன்று வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும். வங்கிகள் இணைக்கப்படும் வரையில் தனித்தனியாகவே செயல்படும். வங்கிகளை ஒன்றாக இணைப்பது செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

அடுத்த தலைமுறைக்காக வங்கிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நேரமாகும் என தெரிவித்துள்ளார். மூன்று வங்கிகளையும் இணைக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.