தேசிய செய்திகள்

பெங்களூரு: மதுபோதையில் வாகனம் ஓட்டிய 562 பேர் மீது வழக்கு

வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா என சோதனை நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்து 898 வாகன ஓட்டிகளை பிடித்து, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூருவில் நடக்கும் விபத்துகளுக்கு மதுபோதை மற்றும் அதிவேகம் காரணம் என போலீசார் கூறி வருகின்றனர். இதையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து போலீஸ்

அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க கடந்த 22-ந்தேதி இரவில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நகரில் உள்ள 53 போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன ஓட்டிகள் மது குடித்துள்ளார்களா என சோதனை நடத்தப்பட்டது.

வழக்குப்பதிவு

இதில், ஒட்டுமொத்தமாக 40 ஆயிரத்து 898 வாகன ஓட்டிகளை பிடித்து, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அப்போது 562 வாகன ஒட்டிகள் மதுகுடித்துவிட்டு குடிபோதையில் தங்களது வாகனங்களை ஓட்டி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. 562 வாகன ஒட்டிகள் மீதும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT