தேசிய செய்திகள்

பெங்களூரு: இஸ்ரோ தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று வழக்கம்போல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, இஸ்ரோ தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர், மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வருகை தந்து சோதனையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனையில் வெடுகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. அதன் பின்னரே வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.