தேசிய செய்திகள்

பெங்களூரு: கடந்த ஒரே வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 504 பேர் மீது வழக்குப்பதிவு

32 ஆயிரத்து 322 வாகன ஓட்டிகளை பிடித்து, அவர்கள் மதுஅருந்தி உள்ளனரா? என போலீசார் பரிசோதனை நடத்தினர்.

பெங்களூரு,

பெங்களூருவில் மதுபோதையிலும், அதிவேகமாகவும் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதையடுத்து, பெங்களூருவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சோதனை

அதன்படி, கடந்த 14-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பெங்களூரு நகர் முழுவதும் மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், 32 ஆயிரத்து 322 வாகன ஓட்டிகளை பிடித்து, அவர்கள் மதுஅருந்தி உள்ளனரா? என போலீசார் பரிசோதனை நடத்தினர். அவர்களில் 504 வாகன ஓட்டிகள் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

இதையடுத்து, 504 பேர் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அதுபோல், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 205 வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கி இருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT