பெங்களூரு,
பெங்களூருவில் ஒரு இரும்பு கம்பி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது ஜி.எஸ்.டி. சூப்பிரண்டை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்து வருபவர் ஜமீர். இரும்பு கம்பிகள் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்திருப்பதாக கூறி ஜமீரிடம், பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலக சூப்பிரண்டு மோகித் பிரதாப் சிங் ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜமீர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். பின்னர் நேற்று காலையில் கோரமங்களாவில் உள்ள அலுவலகத்தில் வைத்து ரூ.8 லட்சத்தை ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு மோகித் பிரதாப் சிங்கிடம், ஜமீர் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லோக் அயுக்தா போலீசார், மோகித் பிரதாப் சிங்கை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.