தேசிய செய்திகள்

தொழிலதிபர் மகளுடன் ஒரே அறையில் இருந்த காதலன்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

மகளிடம் தமிழ்நாடு சென்று வருவதாக கூறிவிட்டு தொழிலதிபர் ஆனந்த் தனது மனைவியுடன் அங்கிருந்து சென்றார்.

பெங்களூரு,

பெங்களூரில் தனது மகளுடன் ஒரே அறையில் இருந்த தொழிலாளியை கிரிக்கெட் மட்டை, பைப் கொண்டு கொடூரமாக தாக்கி தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). இவர் பெங்களூர் எலகங்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் 'ஸ்வீட்கார்ன்' தயாரிக்கும் மெஷின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்

இவரிடம் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் திரு வெகப்புராபகுதியை சேர்ந்த கிரண் (22) என்பவர் தனது சகோதரருடன் வேலை செய்து வந்தார். ஆனந்துக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். இவர் மைசூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறையின் போது வீட்டுக்குவந்து செல்வது உண்டு. அப்போது கிரண் அந்தபெண்ணுடன் பழகி உள்ளார்.

இந்த பழக்கம் இருவருக் கும் நெருக்கமாகி உள்ளது. இதுபற்றி ஆனந்த்துக்கு தெர யவந்தது. தனது மகளை கிரண் விரும்புவதோடு, திரு மணம் செய்து கொள்வாரோ என்று பயந்தார். இதனால் கிரணை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று திட் டமிட்டார். கடந்த 2ம் தேதி ஆனந்த்தின் மகள் வீட்டில் இருந்தார்.

அப்போது அவரிடம் - தமிழ்நாடு சென்று வருவதாக கூறிவிட்டு ஆனந்த் தனது மனைவியுடன் அங்கிருந்து சென்றார். ஆனால் அடுத்த சில மணிநேரங்களில் ஆனந்த் வீட்டிற்கு வந்தார்.

அப்போது ஆனந்த் மகளுடன், கிரண் தனி அறையில் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆனந்த் கிரணை பிடித்து சரமாரியாக தாக்கினார். பிறகு அவர் தனது மகளை சிக்க பள்ளாப்பூரில்உள்ள உறவினர் வீட்டிற்கு

அனுப்பி வைத்தார். மீண்டும் கிரணை கிரிக்கெட் பேட்,பைப் உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்கினார். இரக்கமே இல்லாமல் வயிறு மற்றும் மார்பில் தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த நிலையில் கிரண் மயங்கினார். உடனடியாக ஆட்டோ வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கிரண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். தற்போது ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT