பெங்களூரு,
பெங்களூரு புறநகர் பகுதியான பனவதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆடு ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியான பனவதி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு சினையாக இருந்தது. நேற்று அந்த ஆடு குட்டிகளை ஈன்றது. அதில் 2 குட்டிகள் ஆண், 2 குட்டிகள் பெண் ஆகும்.
வழக்கமாக ஆடு ஒரு குட்டி அல்லது 2 குட்டிகளை அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ஈன்றெடுக்கும். ஆனால் இந்த ஆடு ஒரே நேரத்தில் 4 குட்டிகளை ஈன்றதால் கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.