தேசிய செய்திகள்

அண்ணா இப்படி செய்யாதீர்கள்! கண்டு கொள்ளாமல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கயவர்கள்

அண்ணா இப்படி செய்யாதீர்கள் !! கெஞ்சிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

தினத்தந்தி

உன்னோவ்

பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன

ஒவ்வொரு நகரங்களிலும் அன்றாடம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வட இந்தியா மாநிலங்களில் அதிகமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. நேற்று காட்டுக்குள் இளம்பெண்ணை தூக்கிசென்று 3 நபர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாலியல் தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். உத்தரபிரதேசம் உன்னோவ் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை தூக்கி செல்கின்றனர். இதில் அவர்களுடன் இருந்த மூன்றாவது நபர் வீடியோ எடுக்கிறார்.

அப்பெண்மணி, இவர்களிடம் அண்ணா இப்படி செய்யாதீர்கள் என்னை விட்டுவிடுங்கள் என கதறுகிறார். ஆனால் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். அவர்கள் பெயர் ஆகாஷ் மற்றும் ராகுல் 3 வது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு