தேசிய செய்திகள்

கேண்டி கிரஷ் கேமில் 22,222 லெவல்களை கடந்து பீகார் வாலிபர் உலக சாதனை!

சுபம் குமாரின் சாதனையை பாராட்டி ‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ உலக சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம்பிடித்துள்ளது

பாட்னா,

பிரபலமான மொபைல் விளையாட்டான கேண்டி கிரஷ் கேமில் 22,222 லெவல்களைக் கடந்து பீகாரைச் சேர்ந்த 19 வயது வாலிபர் உலக சாதனை படைத்துள்ளார்.

கேண்டி கிரஷ்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் குமார் (வயது 19). இவர் தனது மொபைலில் கேண்டி கிரஷ் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த விளையாட்டில், இரவு பகல் பாராமல் தீவிரமாக விளையாடிய சுபம் குமார், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் மொத்தம் 22,222 லெவல்களை வெற்றிகரமாக முடித்து அசத்தியுள்ளார்.

உலக சாதனை புத்தகம்

இவரது இந்த சாதனையை பாராட்டி, ‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ (International Book of Records) உலக சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம் பிடித்துள்ளது. உலக அளவில் கோடிக்கணக்கானோரால் விளையாடப்படும் இந்த கேண்டி கிரஷ் விளையாட்டில் லெவல்களுக்கு எல்லையே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுபம் குமாரின் இந்த சாதனை சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT