பாட்னா,
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டதை சேர்ந்த விஷால் குமார் மனைவி காஞ்சன் தேவி. இவர் காதலர் தினத்தை புதுமை யான முறையில் கொண்டாட நினைத்தார். இதற்காக மதுக்கடைக்கு சென்று 'ஒயின் வாங்கி வந்து கணவருக்கு கொடுத்து அசத்தினார்.
பின்னர் அதை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில் கணவருக்கு ரோஜாக்களைக் கொடுத்து, பின்னர் அவருக்கு மது பாட்டிலைக் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. கணவரும் சிரித்துக் கொண்டே அவற்றை வாங்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
பீகாரில் மதுவிலக்கு அமவில் உள்ளதால் இதுபற்றி போலீசார் விசாரித்தனர், அப்போது காஞ்சன் தேவியின் சமூக வலைதளி கணக்குகளை
ஆய்வு செய்தனர். அதில் ஒரு அழகு நிலையத்தில் அவர் துப்பாக்கி வைத்துக் கொண்டு ரீல்ஸ் வெளியிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கி யாருடையது என்பதற்காக போலீசார் தனிப்படை காஞ்சன் தேவியின் வீட்டை சோதனை செய்தனர்.
விசாரணையின் போது, அந்த துப்பாக்கி தீன்தயன் சவுக்கில் வசிக்கும் விஷால் குமாருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பீகாரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பொது வெளியில் காட்சிப்படுத்துவதும், மதுவை ஊக்குவிப்பதும் கடுமையான குற்றங்கள் என்பதால் காஞ்சன் தேவி மற்றும் கணவர் விஷால் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.