தேசிய செய்திகள்

மும்பை புறப்பட தயாரான இண்டிகோ விமானம் மீது மோதிய பறவை

விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று இரவு மராட்டிய மாநிலம் மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

விமானத்தில் மோதிய விமானம்

விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானம் புறப்பட தயாரானபோது திடீரென விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால், விமானம் மும்பைக்கு புறப்படாமல் ஓடுதளத்திற்கே திரும்பி சென்றது.

பின்னர், பறவை மோதியதில் விமானத்தின் எஞ்சினில் பாதிப்பு ஏற்பட்டதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனால் சுமார் 1 மணிநேரம் விமானம் காலதாமதமாக மும்பை புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.

SCROLL FOR NEXT