புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றியெல்லாம் சோனியாகாந்தி சுயசரிதையில் எழுத வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி தனது சுயசரிதை வெளியீட்டை ஒட்டி அளித்த பேட்டியில் கடந்த 12 ஆண்டு களில் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு பெரும் சேதம் இழைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதற்கு பா.ஜனதா பதில் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் தருண் சுக் கூறியதாவது:-
அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சியை இந்தியா எட்டி உள்ளது. 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் உலக வல்லரசாக உயர்ந்துள்ளது. சோனியாகாந்தி இத்தாலி கண்ணாடியை அகற்றினால்தான். இந்தியா வின் வளர்ச்சியை தெளிவாக பார்க்க முடியும்.
நாடு முழுவதும் மக்களிடையே புதிய நம்பிக்கை அலை வீசுகிறது. ஆனால் சோனியாவால் இதை ஜீரணிக்க முடிய வில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்கள், 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம். போபர்ஸ் ஊழலில் சோனியாகாந்தி குடும்பத்தில் சிக்கியவர் யார்? என்பது பற்றியெல்லாம் சோனியாகாந்தி எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்