டெல்லி,
பாஜக மந்திரி இளைஞரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியின் திலக் நகரில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை மந்திரி பர்வேஷ் வர்மா இன்று அப்பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஷகிப் சிங் மந்திரியிடம் சாலை தரம் இல்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த மந்திரி பர்வேஷ் வர்மா இளைஞர் ஷகிப் சிங்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷகிப் சிங் மந்திரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, மந்திரியின் உதவியாளர்கள் ஷகிப் சிங்கை அப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.