புதுடெல்லி,
மோடி பிரதமரான பிறகு. 9 மாநிலங்களில் பா.ஜனதா முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மோடி பிரதமரான 2014-ம் ஆண்டு, அரியானா, மராட்டிய மாநிலங்களில் பா.ஜனதாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது. அரியானாவில், முதல்முறையாக அமைந்த பா.ஜனதா ஆட்சியில் மனோகர்லால் கட்டார் முதல்-மந்திரி ஆனார்.
அதே ஆண்டு, மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவானது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி ஆனார். 2016-ம் ஆண்டு, வடகிழக்கில் பா.ஜனதா கால் பதிக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு, அசாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, சர்பானந்தா சோனோவால் தலைமையில் முதலாவது பா.ஜனதா ஆட்சி பதவி ஏற்றது.
அப்போதிருந்து ஆட்சியை தக்கவைத்து வருகிறது. அதே ஆண்டில், மற்றொரு வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்திலும் முதல் முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி பெமா காண்டு, 33 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைத்தார்.
2017-ம் ஆண்டு, மணிப்பூரில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, பிரேன்சிங் தலைமையில் முதல்முறையாக பா.ஜனதா ஆட்சி அமைந்தது. 2018-ம் ஆண்டு, திரிபுராவில், முதல்முறையாக பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜனதா ஆட்சி பதவியேற்றது. 2024-ம் ஆண்டு, ஒடிசா சட்டசபை தேர்தலில் 24 ஆண்டுகால பிஜு ஜனதாதள ஆட்சியை வீழ்த்தி, பா.ஜனதா ஆட்சி அமைத்தது.
பீகாரில், கூட்டணி ஆட்சியில் பா.ஜனதா இருந்துள்ளது. கடந்த மாதம் நிதிஷ்குமார் பதவி விலகியவுடன், முதல்முறையாக பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைந்தது. தற்போது. மேற்கு வங்காளத்தில், முதல்முறையாக பா.ஜனதா அரசு பதவியேற்றுள்ளது. இதுபற்றி பா.ஜனதா தேசிய செய்தித்தொடர் பாளர் ஷெசாத் பூனவல்லா கூறுகையில், 'இன்று 21-22 மாநி லங்களில் பா.ஜனதா மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந் திய மக்கள்தொகையில் 78 சதவீதத்தை பா.ஜனதா கூட்டணி ஆட்சி ஆள்கிறது. நிலப்பரப்பில் 72 சதவீதத்தை ஆள்கிறது” என்றார்.
பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் துஹின் ஏ.சின்ஹா கூறுகையில், "தமிழ்நாடு, கேரளா ஆகிய 2 தென் மாநிலங்களை தவிர, நாடு முழுவதும் பா.ஜனதா வலிமையான இடத்தில் உள்ளது. அந்த 2 மாநிலங்களும் கட்சியின் வருங்கால விஸ்தரிப்பு திட்டத்தில் இடம் பெற்றுள்ளன” என்றார்.