ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. இதில் அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு ஜோத்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இவர் அங்கு பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை எதிர்த்து போட்டியிடுகிறார்.
19 பேரில் 5 பேர் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், ஒரு எம்.எல்.ஏ., 3 பெண்கள், 6 புதுமுகங்கள் மற்றும் தற்போதைய எம்.பி.க்க ளும் அடங்குவர்.