தேசிய செய்திகள்

முரசு புயலில் சிக்கி மாயமான தமிழக மீனவர்களின் உடல்கள் ஆந்திராவில் மீட்பு

புயலில் சிக்கி படகு கவிழ்ந்ததில் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி,

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர். 'முரசு' புயல் காரணமாக கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுத்தப்பட்டனர். அதன்படி, காசிமேட்டை சேர்ந்த நான்கு படகுகள் ஆந்திரப் பிரதேச கடற்கரையில் நங்கூரமிடப்பட்டன. அவற்றில் மூன்று ராமாயப்பட்டணம் துறைமுகத்திலும், ஒன்று நிஜாம்பட்டணம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டன.

மீனவர்கள் மாயம்

இதற்கிடையே, நிஜாம்பட்டணத்தில் நங்கூரமிட்டிருந்த படகில் இருந்த ஒன்பது மீனவர்கள், அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், தங்கள் சக மீனவர்களுடன் சேர்வதற்காக ராமாயப்பட்டணத்தை நோக்கி புறப்பட்டனர். ராமாயப்பட்டணத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, புயலில் சிக்கி படகு கவிழ்ந்தது.

இதனால் 9 மீனவர்களும் மாயமாகியிருந்தனர். அவர்களைத் தேடும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகு, கொத்தாபுரம் கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்த நிலையில் கிடப்பதை கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மீன்பிடி படகு கொத்தாபுரம் கடற்கரைக்கு இழுத்துவரப்பட்டது.

கரை ஒதுங்கிய உடல்கள்

இந்த நிலையில், மாயமான தமிழக மீனவர்களின் 4 உடல்கள் ஆந்திர கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரைஒதுங்கிய மேலும், எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலில் சிக்கி படகு கவிழ்ந்ததில் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT