தேசிய செய்திகள்

ஐதராபாத்துக்கு வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று காலை விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு இமெயில் வந்தது. விமானம் தரை இறங்குவதற்கு முன்பே குண்டு வெடிக்கும் என்று அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். விமானம் தரை இறங்கிய உடனே அதிலிருந்து பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கி தனிமைப்படுத்தினர். அதன் பிறகு வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் விமானத்தை முழு அளவில் சோதனையிட்டனர்.

தீவிர சோதனைகளுக்குப்பிறகு விமானத்தில் எந்த வெடிகுண்டும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதன் மூலம், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து மெயில் அனுப்பியவர் பற்றிய விவ ரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT