டெல்லி,
தலைநகர் டெல்லியில் 3 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியின் தகுலா கவுன் பகுதியில் உள்ள 3 பள்ளிக்கூடங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் 3 பள்ளிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். மேலும், 3 பள்ளிகளிலும் இருந்த மாணவர்கள் உடனடியாக பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். நீண்ட தேடுதலுக்குப்பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.