தேசிய செய்திகள்

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் தொடக்கம்

'இன்று உலகம் எதிர்கொள்ளும் மரபுசாரா பாதுகாப்புச் சவால்கள்' என்ற தலைப்பில் கூட்டம் நடக்கிறது.

புதுடெல்லி,

பிரிக்ஸ் நாடுகளான பிரேசில்,ரஷியா, இந்தியா,சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் டெல்லி யில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்குகிறார்.

'இன்று உலகம் எதிர்கொள்ளும் மரபுசாரா பாதுகாப்புச் சவால்கள்' என்ற தலைப்பில் கூட்டம் நடக்கிறது. இதில், தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் வேகமாக மாறிவரும் தன்மை மற்றும் உருவாகிவரும் பாதுகாப்பு அபா யங்களில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் பாதிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் பிரதிநிதிகள் ஆய்வு செய்கிறார்கள்.

இது தவிர தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் தூதுக் குழுத்தலைவர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டுப் பணிக்குழுக்களின் முடிவுகளை மதிப்பாய்வு செய்கிறார்கள். பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா 2012, 2016 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் தலைமை தாங்கி இருந்தது.

இதுபோல இந்த ஆண்டு 4-வது முறையாக தலைமைப் பொறுப்பை வகிக்கும் நிலையில் இந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெ றுவது குறிப்பிடத்தக்கது. 2025 ரியோ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மக் கள் மையக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 'மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக் கான கட்டமைப்பு' என்ற கருப்பொருளின் கீழ் இந்தியாவின் தலைமைப் பொறுப்பு செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.