தேசிய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாடு; ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படும்

உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 நாட்களுக்கு 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

3 நாட்கள்

இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், ராஷ்டிரபதி பவன் மியூசியம் மற்றும் அம்ரித் உத்யன் ஆகிய பகுதிகள் நாளை முதல் 3 நாட்களுக்கு (11 முதல் 13 வரை) மூடப்பட்டு இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு அனுமதி கிடையாது.

இதேபோன்று ராஷ்டிரபதி பவனில், ராணுவ வழக்கப்படி வாரந்தோறும் சனிக்கிழமை காலை நடைபெற கூடிய, ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் பொறுப்பு மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியும் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறாது என ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது.

SCROLL FOR NEXT