தேசிய செய்திகள்

செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி பெண்ணை கட்டிப்போட்டு பலாத்காரம்: அண்ணன்-தம்பிக்கு வலைவீச்சு

சுதாகருக்கு, கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

திருப்பதி,

ஆந்திர மாநிலம், நகரிக்கல்லு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண். தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவர் தலைமைச் செயலகத்தில் வேலை செய்து வந்தார். பணியில் இருந்தபோது 3 பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். இது சம்பந்தமான புகாரின் பேரில் சுதாகர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சுதாகருக்கு, கணவரை பிரிந்து வாழும் பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. 'நேற்று முன்தினம் இரவு அந்தப் பெண் கிராமத்தின் புறநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த சுதாகர் மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீனு பெண்ணை இருவரும் மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இருவரும் பெண்ணின் கை, கட்டி கால்களை போட்டனர். பின்னர் செல்போனில் வீடியோ பதிவு செய்தபடி இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர். பெண் அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்தார். மீண்டும் வீட்டிற்கு வந்த சுதாகர் மீண்டும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் அவசர எண் 100-க்கு போன் செய்தார். அதன் பேரில் நகரிக்கல்லு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை கண்ட சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சகோதரர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.