மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப். 36 வயதான இவர், கார் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். 'பாகி', 'பாகி-2', 'வார்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நேற்று மாலை டைகர் ஷெராப் ஜூகு புஷ்பா பார்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்துக்கு சென்றார். இது பற்றி அறிந்து அவரது ரசிகர்கள் மைதானம் அருகில் குவிந்தனர். இந்தநிலையில் விளையாடி முடித்துவிட்டு டைகர் ஷெராப் காரில் வெளியே வந்தார். அப்போது ரசிகர்கள் திரண்டு இருந்த பகுதியில் அவரது கார் மெதுவாக ஊர்ந்துசென்றது.அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மந பர்கள் 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் டைகர் ஷெராப்பின் காரை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடியது.
நடிகர் கார் மீது நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு இருந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்தநிலையில் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் நடிகர் டைகர் ஷெராப் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். எனினும் அவரது கார் டிரைவர் பிர்தோஷ் மற்றும் அருகில் நின்ற சவுகான் என்பவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். காயமடைந்த 2 பேரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தகவல் அறிந்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர் கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள டைகர் ஷெராப் இல்லத்திற்கு நேற்று சென்ற துணை முதல் மந்திரி ஏக்நாத்ஷிண்டே, நடிகரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், கவலையில் இருந்த அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்ததுடன், துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "தோட்டாக்களுக்குத் தோட்டாக்களால் பதிலடி கொடுக்கப்படும். மும்பையில் நடக்கும் கும்பல் மோதல்களை அரசு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்தார்.