தேசிய செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் - மத்திய மந்திரி தகவல்

இந்த ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்று காரணமாக இந்திய விமான போக்குவரத்து துறை பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டக்கூடும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மே 25-ந் தேதி முதல் நாம் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கினோம். அந்த நேரத்தில் சுமார் 30 ஆயிரம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தனர்.

இன்று நான் தரவுகளை பெற்றேன். அதன்படி உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தீபாவளிக்கும் இந்த ஆண்டின் இறுதிக்கும் இடையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முந்தைய நிலையை நாம் அடையப்போகிறோம் என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது