தேசிய செய்திகள்

“புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்” - நிதின் கட்கரி

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்கரி உரையாற்றினார்.

நாக்பூர்,

புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும்

நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய நிதின் கட்கரி, “என்னால் முன்புபோல இப்போது அதிக பணிகளை செய்ய முடியவில்லை. புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இந்த காலகட்டத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். பல விருதுகளையும் பெற்றுள்ளேன்.

ஆனால், என்னால் இப்போது முன்பைப் போல அதிகமாகப் பணியாற்ற முடியவில்லை. எனவே, மூத்த தலைமுறையினர் வழிகாட்ட, புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்று, பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.