சுப்ரீம் கோர்ட்டில், அஜய் கோயல் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும். வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அவர்கள் அரசு திட்டங்களை பெற தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, விபுல் எம்.பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது.மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். தலைமை நீதிபதி கூறியதாவது:-மனுதாரர் கேட்பது கொளகை முடிவு சார்ந்த விவகாரம்.இதில் நீதித்துறை உத்தரவிட முடியாது.நமது நாடு, சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாடு. ஜனநாயகத்தின் மீதான நம்பிக் கையை 75 ஆண்டுகளாக காண்பித்துள்ளோம். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒருசிலர் போகக்கூடாது என்று நினைத்தால், போக மாட்டார் கள். இதில் விழிப்புணர்வுதான் தேவை. யாரையும் வற்புறுத்த முடியாது.
வாக்களிக்காமல் இருப்பதை எப்படி குற்றமாக்கு வது? அவர்களை கைது செய்ய உத்தரவிட வேண்டுமா? ஒரு வர் வாக்களிக்க செல்லாவிட்டால் நாம் என்ன செய்ய முடி யும்?அதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. தேர்தல் நாளில் நீதிபதிகள் உள்பட பலருக்கு பணிகள் இருக்கின்றன. வாக்க ளிப்பதை கட்டாயமாக்கினால், எனது சக நீதிபதி ஜோய் மால்யா பக்சி, பணிநாளாக இருந்தாலும் வாக்களிக்க மேற்கு வங்காளத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். நீதித்துறை பணி யும் மிக முக்கியமானது. ஒரு ஏழை, தான் வேலைக்கு சென்றால்தான் சம்பளம் கிடைக்கும், நான் எப்படி வாக்களிப்பது என்று கேட்டால், நாம் என்ன சொல்ல முடியும்? இவ்வாறு தலைமை நீதிபதி கூறி னார்.