தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதல்; 11 பேர் பலி

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நகாவுர்,

ராஜஸ்தானின் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது இன்று காலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர 7 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் பிகானிர் பகுதியில் நோக்கா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த விபத்துபற்றி ஸ்ரீபாலாஜி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT