தேசிய செய்திகள்

சுரங்கப்பாதையில் டெம்போ மீது மோதிய கார் - ஒருவர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை, புனே இடையே எக்ஸ்பிரஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்கின்றன.

விபத்து - ஒருவர் பலி

இந்நிலையில், புனேவில் இருந்து 5 பேருடன் கார் மும்பைக்கு சென்றுகொண்டிருந்தது. மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் வடக் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, காய்கறி ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டெம்போ மீது கார் மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த துஷார் பம்கர் என்பவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.