திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித் மற்றும் ஜாய் ஒரு காரில் மூணாறு சென்று விட்டு திருவனந்தபுரம் திரும்பிக் கொண்டிருந்தனர். இடுக்கி பெருவந்தானம் பகுதியில் அவர்கள் வந்த போது எதிரே ஒரு வாகனம் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வாகனத்தின் மீது மோதிய கார் நிலை தடுமாறி சாலையில் இருந்து விலகி அங்கிருந்த சுமார் 400 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
அந்த பள்ளத்தில் அடர்ந்த புதர் இருந்ததால் கார் அதில் சிக்கியபடி கீழே விழுவது தடுக்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதியினர் விரைந்து செயல்பட்டு பள்ளத்தில் இறங்கி காரில் இருந்த 2 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக பெருவந்தானம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.