கொல்கத்தா,
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. இவர் மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.
இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கொல்கத்தாவின் மேயோ சாலையின் ஒரு பகுதியில் விழா நடத்த கொல்கத்தா ஐகோர்ட்டு அனுமதி அளித்திருந்தது.
மேலும், விழா மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும். விழாவில் 1,500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கோர்ட்டு உத்தரவை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விழா நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அனுமதி அளிக்கப்பட்ட நபர்களை தவிர கூடுதல் நபர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மம்தா பானர்ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.