புதுடெல்லி,
இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நையாண்டியாக உருவாக்கப்பட்டு இருக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உலக அளவில் கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த கட்சிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு உள்ளது.
அதாவது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் தொடர்புடைய போலி வக்கீல்கள் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கோர்ட்டு நடவடிக்கைகளின்போது வெளியிடப்பட்ட வாய்மொழிக் கருத்துக்களை வைத்து, வணிக ரீதி யான சுரண்டலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.