புதுடெல்லி,
டெல்லியில் கடந்த அக்டோபர் 12-ந்தேதி நடைபெற்ற பேரணியின் போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கர்ப்பிணி பெண் பத்திரிகையாளர் ஒருவரை பிடித்து தள்ளியதாக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண் பத்திரிகையாளர் 3 மாத கர்ப்பிணி என்றும், நீதிமன்ற வளாகத்திலேயே பெண் பத்திரிகையாளர் அவமதிக்கப்பட்ட இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வக்கீல் கவுரவ் பாட்டியா முறையிட்டார்.
இந்த மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வருகிற 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் விசாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த பேரணி தொடர்பாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.