தேசிய செய்திகள்

மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கு: 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது

கழுத்தில் ஸ்க்ரு டிரைவரால் குத்தி மூதாட்டியை படுகொலை செய்தனர்.

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் மெரடன் குஞ்சாமினா(வயது 60). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் டெல்லியை சேர்ந்த துணி வியாபாரியான பர்வீன்பானு(55), அவருடைய மகள் ஷக்கீனா பாத்திமா(35), அப்பாஸ் அலி (38).

இந்த நிலையில் பர்வீன்பானு, தனது மகள், மகனுடன் தனியாக இருந்த மெரடன் குஞ்சாமினா வீட்டுக்கு சென்றார். அங்கு இவர்கள் மூதாட்டியை ஒரு நாற்காலியில் வைத்து கை, கால்களை கட்டினார்கள். பின்னர் கழுத்தில் ஸ்க்ரு டிரைவரால் குத்தி படுகொலை செய்தனர்.

பின்னர் அவர்கள் அணிந்து இருந்த 10 பவுன் நகை, ரொக்கம் ரூ.10 ஆயி ரத்தை திருடி விட்டு தப்பி விட்டனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந்தேதி நடந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்த இவர்கள் தலைமறைவானதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் பதுங்கி இருந்த பர்வீன் பானு (55) அவருடைய மகள் ஷக்கீனா பாத் திமா (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். முக்கிய குற்ற வாளியான அப்பாஸ் அலியை தேடி வந்தனர். கண்ணூர் போலீஸ் சூப்பிரண்டு கே.வி.வேணுகோபால் உத்த ரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கொடேரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர், அப்துல் ரப், மனேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையி னர் தலைமறைவான அப்பாஸ்அலியை தேடி வந்தனர். டெல் லியில் உள்ள பிரேம் நகர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியான அப்பாஸ் அலி கைது செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT