மாண்டியா,
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தமிழ்நாடு - கர்நாடகா இடையே நீண்ட காலம் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து பேச இருக்கிறார்.
இதற்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கர்நாடகாவிலும் இருமாநில முதல்வர்கள் சந்திப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், மாண்டியாவில் ஜனநாயகன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த தமிழக முதல்-அமைச்சர் விஜய் போஸ்டரை கன்னட அமைப்பினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.