புதுடெல்லி,
காவிரியில் இருந்து மேற்கொண்டு தமிழகத்திற்கு நீா் திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் என்ற கணக்கீட்டில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் கூடி, தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன.
இந்த நிலையில் ஆணையத்தின் 61-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
காவிரியில் இருந்து மேற்கொண்டு தமிழகத்திற்கு நீா் திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது.