புதுடெல்லி,
தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை, 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கக் கோரி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள நான்கு முக்கிய அணைகளிலும் நீர்வரத்து கடுமையாக குறைந்துள்ளதால், கூடுதல் நீரை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.