தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் மாற்றம்: மத்திய அரசு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்த குளறுபடி தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 13ஆம்தேதி அன்று சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் முறையில் தெளிவற்ற விடைத்தாள் ஸ்கேன் பிரதிகள், பக்கங்கள் விடுபடுதல் மற்றும் தவறான மதிப்பெண் வழங்கீடு போன்ற பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளதாக நாடு முழுவதும் கடுமையான சர்ச்சை வெடித்தது. இதனால் சுமார் 18.5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தநிலையில், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் செயலாளர் ஹிமான்ஷி குப்தாவை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குளறுபடி புகார்கள் எழுந்ததை அடுத்து இருவரையும் மாற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விசாரிக்க குழு அமைப்பு

மறுமதிப்பீடு, மதிப்பெண் சரிபார்ப்புக்கான ஓஎஸ்எம் முறையில் குளறுபடி காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் முழுமையாக தெரியவில்லை, பதில்கள் முழுமையாக பதிவேற்றப்படவில்லை என புகார் எழுந்தது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்த குளறுபடி தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளத

பொதுநல வழக்கு

இதனிடையே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பொதுநல வழக்கும் (PIL) தொடரப்பட்டுள்ளது. ஆனால், சிபிஎஸ்இ நிர்வாகம் இக்குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து, திருத்தப்பட்ட மொத்தம் 98 லட்சம் விடைத்தாள்களில் வெறும் 13,000 தாள்களில் மட்டுமே சிறு திருத்தங்கள் தேவைப்பட்டதாகவும், இவை அனைத்தும் ஆங்காங்கே நடந்த தனிப்பட்ட சில தொழில்நுட்பக் குறைபாடுகளே தவிர ஒட்டுமொத்தப் பாதிப்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.