தேசிய செய்திகள்

போர் நிறுத்தம் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை ‘கிடுகிடு’ உயர்வு

ஈரான்-அமெரிக்கா போர் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகையும் பாதித்தது.

புதுடெல்லி,

போர் நிறுத்தம் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர் ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்தது. அது மட்டுமின்றி வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகையும் பாதித்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பை சந்தித்தன. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து சர்வதேச நாடுகளில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சுமார் 40 நாட்கள் தீவிர தாக்குதலுக்குப்பின் இருதரப்பும் தற் காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. பின்னர் பெரும் முட் டுக்கட்டைகளுக்குப்பின் கடந்த மாதம் 17-ந் தேதி ஈரான்-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கச்சா எண்ணெய்

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலையடுத்து ஈரானுடனான தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து, இரண்டு வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஜூன் மாதத்தில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தால் சரிந்து வந்த கச்சா எண்ணெய் விலை, நேற்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6.4 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 544 ரூபாய் (78.93 அமெரிக்க டாலர்) ஆக மாறியுள்ளது. அமெரிக்கா கச்சா எண்ணெய் ஆன டபிள்யூ.டி.ஐ. விலை 6.5 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 167-க்கு (74.99 டாலர்) ஆக அதிகரித்துள்ளது.