அரிசி ஏற்றுமதி 
தேசிய செய்திகள்

அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை

உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

நாடு முழுவதும் பாஸ்மதி அல்லாத அரிசி விலை அதிகரித்து வருகிறது. எனவே, உள்நாட்டில் அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, பாஸ் மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.அடுத்த மாதம், இந்த வரி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும் நிர்ணயிக்கப்படும். மேலும், கடைசி நடவடிக்கையாக, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் கடந்த தடவை 14 மாதங்கள் நீடித்ததுபோல் இல்லாமல், இந்த தடவை தற்காலிக நடவடிக்கையாகவே இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT