மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் விமான எரிபொருள் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் வழக்கத்தை விட நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதால் விமான இயக்க செலவுகள் உயர்ந்துள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பால் விமான சேவையை குறைப்பதாக விமான நிறுவனங்கள் அறிவித்தன. இந்த நிலையில், எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவால் விமான சேவைகள் வழக்கம் போல இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.