தேசிய செய்திகள்

மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை: கர்நாடக மந்திரி சொல்கிறார்

மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீர்ப்பா சனத்துறை மந்திரி செலுவராயசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

காவிரி நீர் பிரச்சினை குறித்த புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-

குடிநீர் திட்டங்கள் குறித்த விஷயத்தில் பிற மாநிலங்களில் தகராறில் ஈடுபடக்கூ டாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியுள்ளது. இருப்பினும் மகதாயி குடிநீர் திட்டத்துக்கு கோவாவின் எதிர்ப்பால் மத்திய அரசு வனத்துறை அனுமதி வழங்காமல் இருக்கிறது. இது துயரமானது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

திட்ட அறிக்கை

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். கர்நாடகத்தின் கஷ்டங்களை நாங்கள் எடுத்துக் கூறுவோம். மேகதாது திட்டம் குறித்த திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து அனுமதி கேட்டுள்ளோம். மத்திய நீர் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறியுள்ளோம். மேகதாது திட்டத்தால் நீரில் மூழ்கும் வனப்பகுதிக்கு இணையாக வேறு இடத் தில் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை ஒதுக்குகிறோம்.இதில் 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளோம். மீத முள்ள நிலத்தை அடையாளம்காணும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. திட்ட அறிக்கைக்கும், வனத்துறை அனுமதிக்கும் சம்பந்தம் இல்லை. அதனால் திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு நாங்கள் அதிக அழுத்தம் கொடுத்துள்ளோம்.

ஆதரவாக தீர்ப்பு

சுப்ரீம் கோர்ட்டு நமக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது மத்திய அரசுக்கு தெரியும். இருப்பினும் மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. கர்நாடகத்தில் இருந்து பா.ஜனதாவுக்கு அதிக எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். தமிழ்நாட்டில் அக்கட்சிக்கு பெரிய லாபம் இல்லை. ஆனால் மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT