நாடாளுமன்றம் 
தேசிய செய்திகள்

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவில் கூட்ட மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது

மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை கொண்டு வர நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

தென் மாநிலங்கள் எதிர்ப்பு

வரும் 2029-ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலின் போது மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த பா.ஜனதா அரசு விரும்புகிறது. இதற் காக தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையான 543-ஐ 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயர்வால் வட மாநிலங்களுக்கு கூடுதல் இடங்களும், தென் மாநிலங்களுக்கு குறைந்த இடங்களும் கிடைக்கும் என தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. இந்த சட்டத்தை நிறைவேற்ற கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. ஆனால் அந்த மசோதா தோல்வியில் முடிந்தது.

மழைக்கால கூட்டம்

இதற்கிடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அலுவல்கள் வெகுவாக முடங்கின. இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.தற்போது மழைக்கால கூட்டம் முடிந்து 91 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் அந்த கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படவில்லை. இந்நிலையில் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோ தாவை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட மத் திய அரசு திட்டமிட்டுள்ளது.

361 வாக்குகள் தேவை

இந்த மசோதா நிறைவேற 361 வாக்குகள் தேவை. தற்போதுமக்களவையில் அனுமதிக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கு பதிலாக, 3 இடங்கள் காலியாக உள்ள தால் 540 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் 15 முதல் 18 வாக்குகள் வித் தியாசத்தில் வெற்றி பெற முடியும் என மத்திய அரசு நம்புகிறது. தேவையான எண்ணிக்கையிலான ஆதரவு கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தாலும், கூட்டத்தொடரின் உத்தேசிக்கப்பட்ட தேதிகள் அல் லது கால அளவை இதுவரை வெளியிடவில்லை.

SCROLL FOR NEXT